Thursday, 9 May 2019


குமரிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
மடகாசுகர்தென்னிந்தியாஆத்திரேலியா ஆகியவற்றை இணைக்கும் இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாசுகாரிலிருந்து ஆத்திரேலியா வரையான தொலைவு கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.
குமரிக்கண்டம் (kumari Kandam) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது [1]. இது பண்டைய தமிழர்நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். ஆபிரிக்காஆத்திரேலியாஇந்தியா மற்றும் மடகாசுகர்நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய பாண்டியர்களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.
பண்டைய தமிழர் நாகரிகம் இலெமுரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற ’குமரிக் கண்டம்’ என்ற பெயரை பயன்படுத்தினர். இலெமூரியா கண்டக் கோட்பாடானது பின்னர் கண்டறியப்பட்ட புவித்தட்டுகள் சீரமைப்புக் கோட்பாட்டால் வழக்கற்றுப் போனது. இருப்பினும் இந்த கருத்தாக்கம் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் மறுமலர்ச்சியாளர்களிடையே பிரபலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வறிஞர்களின் கருத்துப்படி இலெமூரியாவில் ஆட்சிசெய்த பாண்டியர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவும் குமரி கண்டம் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என அவர்கள் கூறுகின்றனர்.

பெயர்களும் சொற்பிறப்பியலும்[தொகு]

1890 களில் லெமுரியா என்ற கருத்துரு தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமான பிறகு அவர்கள் அக்கண்டத்தின் பெயரை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப இலெமூரியா எனத் தமிழ்ப்படுத்தினர். 1900 களின் தொடக்கத்தில் அவர்கள் பண்டைய தமிழ் நாகரீகமான இலெமுரியாவின் இருப்பை ஆதரிப்பதற்காக கண்டத்தின் தமிழ் பெயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 1903 இல் பரிதிமாற் கலைஞர் வி.கோ. சூர்யநாராயண சாசுதிரி தமிழ் மொழியின் வரலாறு என்ற தன்னுடைய நூலில் முதன்முதலில் குமரி நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தினார். 1930 களில் இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரிப்பதற்கு குமரிக்கண்டம் என்ற சொல்லை பயன்படுத்தத் தொடங்கினார்கள் [2].
சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.[3] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்[4] அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
கடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.[5] பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது.[6] மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு. 1350 - 1420 காலப்பகுதியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், சிகந்த புராணம் என்ற வடமொழி காவியத்தை தமிழில் கந்த புராணம் என்ற பெயரில் எழுதினார். இக்காவியத்தில் குமரிக் கண்டம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன் ஆகும். குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம்.[7]
கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப்படலத்தில் பிரபஞ்சம் என்பது பின்வரும் அண்டவியல் மாதிரியாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது. குமரிக் கண்ட கோட்பாடு டன் பிராமணிய-எதிர்ப்பும் சமசுகிருத எதிர்ப்பும் தமிழ் தேசியவாதிகளிடையே பிரபலமாகியிருந்தது. கந்த புராணம் உண்மையில் குமரிக் கண்டத்தை பிராமணர்கள் வசிக்கும் இடமாக விவரிக்கிறது, அங்கிருந்தவர்கள் சிவனை வழிபாடு செய்ததாகவும், வேதங்களை ஓதியதாகவும் கூறுகிறது. மீதமிருந்த பேரரசுகள் அனைத்தும் மிலேச்சர்கள் பிரதேசமாக விவரிக்கப்பட்டுள்ளது.[8][9]. மேலும் கந்தபுராணத்தின் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் 'குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் தெரிகிறது.[10] இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த) அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா (20 மில்லியன் ஆணடுளுக்கு முன் மூழ்கிய கண்டம்) என்பது வேறு. இலக்கிய இலெமூரியா என்பது வேறு. அல்லது 20 மில்லியன் ஆண்டுகள் முன்பிருந்து கி.மு.30000 வரை தோன்றிய கடல்கோல்களால் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறிய இலெமூரியா இலக்கிய இலெமூரியாவாக (குமரிக்கண்டம்) மாறியிருக்கலாம். எப்படி என்றாலும் இலெமூரியா என்ற பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று ஆகும்.[11]
குமரிக் கண்டம் அல்லது குமரி நாடு என்ற சொற்களை விளக்க 20 ஆம் நூற்றாண்டு தமிழ் எழுத்தாளர்கள் பல்வேறு கோட்பாடுகளுடன் வந்தனர். தமிழ் தாயகத்தில் பாலினச் சமநிலை கொள்கை நிலவியதை மையப்படுத்தும் தொகுப்பு கூற்றுகள் அவற்றுள் ஒரு கோட்பாடாகும். உதாரணமாக 1944 ஆம் ஆண்டில் எம். அருணாசலம் என்ற எழுத்தாளர் அந்த நிலப்பகுதி குமரிகள் எனப்படும் பெண் ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். தங்களுக்குரிய கணவரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழக்கமும், சொத்துகள் அனைத்திற்கும் அவர்களே அதிபதிகள் என்ற உரிமையும் இந்நிலப்பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு இருந்தது. எனவே தான் இப்பகுதிக்கு குமரி நாடு என்ற பெயர் வந்தது என்று டி சவரிராயன் பிள்ளை என்ற எழுத்தாளர் கூறியுள்ளார். இந்துக்களின் தெய்வமான கன்யா குமாரியை மையமாகக் கொண்டு குமரிக் கண்டத்தை விளக்கும் கோட்பாடும் அப்போது முன்னிலை பெற்றது. கந்தையா பிள்ளை என்பவர் குழந்தைகளுக்கான தன்னுடைய ஒரு புத்தகத்தில் கன்யா குமரி தேவிக்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார், குமரிக் கண்ட நிலப்பகுதிக்கு அத்தெய்வத்தின் பெயரே பெயராக இடப்பட்டது என்று கூறினார். குமரிக் கண்டம் வெள்ளத்தில் மூழ்கியபோது தப்பிப்பிழைத்தவர்களால் கன்னியாகுமரி கோவில் நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். இந்திய ஆரியர்கள் போன்ற இனக்குழுக்களின் தொடர்புக்கு முன்னர் இருந்த நாகரிகத்தினர் மற்றும் மொழியின் தூய்மையை கன்னி என்ற பொருள் கொண்ட குமரி என்ற சொல் குறிக்கிறது என கலாச்சார வரலாற்றாசிரியரான எழுத்தாளர் சுமதி ராமசாமி கூறுகிறார் [12].
தமிழ் எழுத்தாளர்கள் தொலைந்த கண்டத்தை குறிப்பிட பல பெயர்களைப் பயன்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், சோமசுந்தரா பாரதி முதன்முதலில் லெமுரியியாவின் கருப்பொருளாகக் கொண்ட தமிழகம் என்ற ஒரு பெயரைப் பயன்படுத்தினார், பாண்டியர்கள் தொன்மை வாய்ந்தவர்கள் என்பதால் அப்பண்டைய நாகரிகத்தைக் குறிப்பிட பாண்டிய நாடு என்ற பெயரும் பயன்படுத்தப்பட்டது. சில எழுத்தாளர்கள் சம்புத் தீவென்ற பொருள் கொண்ட நாவலந்தீவு என்ற பெயரையும் பயன்படுத்தினர்[13].

பண்டைய இலக்கியங்கள் காட்டும் மூழ்கிய நகரங்கள்[தொகு]

முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென பண்டைய நூற்தகவல்கள் குறிக்கின்றன. குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின்ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. இவ்விலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிலவற்றையும் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்பையும் கீழே காணலாம்.
தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் [14]ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து ஆகும்.
பண்டைய மற்றும் இடைக்கால தமிழ் மற்றும் சமசுகிருத படைப்புகள் பலவற்றில் இருந்த தென்னிந்தியாவின் நிலப்பகுதி பற்றிய புராண ஆவணங்கள் கடலில் மூழ்கி மறைந்தன. பாண்டிய பேரரசு கடல்கோளால் அழந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. ஆரம்பகால தமிழ் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென் மதுரையில் 4400 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்தது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் அச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்ந்தனர் என்றும் கடவுளர்களான சிவன், முருகன் குபேரன் ஆகியோர் தலைமையில் அச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன.
அதன் பிறகு 3700 ஆண்டுகள் கால அளவில் இரண்டாம் தமிழ்சங்கம் கபாடபுரத்தில் மலர்ந்ததாகவும்அகத்தியர் உள்ளிட்ட 59 புலவர்கள் அங்கிருந்து மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இவ்விரு சங்கங்களிலும் இயற்றப்பட்ட நூல்கள் அனைத்தும் கடல் கோளால் அழிந்துபட்டன என்றும் இதன்வழி அறியலாகிறது. உத்தர மதுரையில் தோன்றிய மூன்றாவது சங்கமான கடைச் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது[15][16][17].
  • தென்குமரிக்கண்டத்தின் தலைநகராகத் தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் வழியாக நாமறியும் தகவல்களாகும்.
  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் நக்கீரரின் உரையில் குறிப்பிடப்படவில்லை. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில் இக்கண்டத்தின் பரப்பளவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வடக்கில் பற்றுளி நதியில் இருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் சுமார் 700 கவட்டம் அளவுக்கு இக்கண்ட நிலப்பகுதி இருந்ததாக அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.
இக்கண்டம் 49 பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஏழு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டது என்றும் அறியமுடிகிறது[17]சிலப்பதிகாரத்தில்"பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22) பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [18]

குமரிக்கண்டம் இருந்தது என்று கருதுவோரின் பேச்சுக்கள்[தொகு]

உண்மையிலேயே குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்று கருதுவோர் பின்வரும் உரைகளை முன் வைக்கின்றனர்.

கடலியல் அடையாளம்[தொகு]

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.[19] முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.[20]

குருதி அடையாளம்[தொகு]

அமேரிக்காவை வரலாற்றுக் காலத்திற்கு முன்னே தென்னிந்தியர் கண்டுபிடித்து விட்டனர் என்பது அண்மைக் காலத்திய ஆராய்ச்சியாளர் கொள்கை. இதை மெய்ப்பிக்கச் சோவியத் அறிவியல் ஆய்வாளர் யூரி இரெசெதோவ் தான் பல்வேறு மனித இனத்தவரிடையே குருதிச்சோதனையில் இறங்கியதாகக் குறிப்பிடுகிறார். அதன்படி செவ்விந்தியரும் தென்னிந்தியரும் 20,000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக வசித்ததாகக் குறிப்பிடுகிறார்.[21] அதனால் இரண்டுக்கும் நடுவில் ஒரு கண்டம் இருக்க வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை[தொகு]

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் நூலில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது.[22]

இராமாயணத்தில் இடைச்சங்கம்:[தொகு]

  1. இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான அடையாளங்கள் இராமாயணத்தில் தென்படுகின்றன[23]. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராயிருந்தாரெனவும், இராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் இருக்கிறது.
  2. கால ஒற்றுமை - ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது.
  3. திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.[24] சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுளதும் குறிப்பிடத்தக்கது.

நிலவியல்[தொகு]

தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது [25]. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான வாய்ப்புகள் மேலும்.

சித்தரியல்[தொகு]

சித்தர்கள் சில பேர் இக்குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர்கள்,
  1. காகபுசுண்டர்[26] (மேருமலையில் இவர் சிரஞ்சீவியாக இருப்பதாக கருதப்படுகிறது[27])
  2. அகத்தியர்[28]
  3. போகர்
  4. மகாவதார பாபா[29]

மயன் பற்றிய குறிப்புகள்[தொகு]

குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன்[30] பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.
ஐந்திறம் கூறும் குமரிக்கண்டம்
மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரி மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுளது.[31]
வைசம்பாயனம் கூறும் குமரிக்கண்டம்
வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை(பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது.[32]

நூல் பதிவுகள்

murugan

முருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
பௌத்த மதக் கடவுளுக்கு, பார்க்க: கந்தர் (பௌத்தம்)
முருகன்
முருகன் வீதி உலா.jpg
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
அதிபதிதமிழ்
வகைவினை தீர்ப்பவர்
மந்திரம்ஓம் சரவணபவ
ஆயுதம்வேல்
துணைவள்ளிதெய்வானை
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.

பெயர்க் காரணம்[தொகு]

"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

வேறு பெயர்கள்[தொகு]

  • சேயோன்
  • அயிலவன்-வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
  • ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • முருகன் - அழகுடையவன்.
  • குமரன் - இறைவனாய் எழுந்தருளியிருப்பவன்.
  • குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
  • காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன்.
  • சரவணபவன் - சரவணப்பொய்கையில் உதித்தவன்.
  • சேனாதிபதி - சேனைகளின் தலைவன்.
  • வேலன் - வேலினை ஏந்தியவன்.
  • சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்.
  • கந்தன் - ஒன்று சேர்க்கப்பட்டவன்.
  • கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்.
  • சண்முகன் - ஆறு முகங்களை உடையவன்.
  • தண்டாயுத பாணி - தண்டாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவன்.
  • வடிவேலன் - அழகுடைய வேலை ஏந்தியவன்.
  • சுப்பிரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன்.
  • மயில்வாகனன்
  • ஆறுபடை வீடுடையோன்
  • வள்ளற்பெருமான்
  • சோமாஸ்கந்தன்
  • முத்தையன்
  • சேந்தன்
  • விசாகன்
  • சுரேஷன்
  • செவ்வேள்
  • கடம்பன்
  • சிவகுமரன் - சிவனுடைய மகன்.
  • வேலாயுதன், சிங்கார வேலன் - வேல் என்ற ஆயுதத்தினை உடையவன்
  • ஆண்டியப்பன் - ஆண்டியாக நின்றவன்
  • கந்தசாமி
  • செந்தில்நாதன்
  • வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.

முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்[தொகு]

  • விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
  • அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
  • கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன்.
  • சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
  • கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
  • அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
  • ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்
இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.

முருக புராணம்[தொகு]

பிறப்பு[தொகு]

பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு கண்களை உடையவர்.

ஞானப்பழம்[தொகு]

ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.[2]

பன்னிருகரங்களின் பணிகள்[தொகு]

முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.[3]

தெய்வானையுடன் திருமணம்[தொகு]

முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனைஅழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

வழிபாட்டு முறை[தொகு]

அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.[4]

விழாக்கள்[தொகு]

கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா ஆகும்

நூல்கள்[தொகு]

கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்து உரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியம் ஆகும்.

முருகன் குறித்த பழமொழிகள்[தொகு]

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”

முருகன் ஆலய வழிபாடுகள்[தொகு]

தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
முதன்மைக் கட்டுரை: பத்துமலை
திருமுருகன் பூண்டி தேர் திருவிழா

முருகனின் அடியவர்கள்[தொகு]

கோவில்கள்[தொகு]

முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.

அறுபடை வீடுகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: அறுபடைவீடுகள்
  • திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
  • பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
  • திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.

மலேசியா[தொகு]

முருகனின் சிலை, மலேசியா
மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

தமிழ்[தொகு]

தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் குறிப்பிடப்படுகின்றார். "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1.  https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha
  2.  http://www.tnguru.com/2016/01/blog-post_47.html
  3.  பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012
  4.  http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு
  5.  கலைமகள்; டிசம்பர் 2014; திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும்; பக்கம் 30-32
கந்த சஷ்டி அபிஷேகம் https://www.youtube.com/watch?v=sQzRW7HjEf4
சுப்ரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வானை அபிஷேகம் https://www.youtube.com/watch?v=Wrg1cESbM2I

ஒப்பிட்டு உணர்க[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குமரிக்கண்டம் https://ta.wikipedia.org/s/1c கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigation Jump to s...